நாங்குநேரி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு- தந்தை, அண்ணனுக்கு வலைவீச்சு
- வேல்பாண்டியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் தோட்டத்தில் தேங்காய்கள் பறித்து கொண்டிருந்தனர்.
- மாடசாமி, மகாராஜன் ஆகியோர் சேர்ந்து வேல் பாண்டியை கம்பால் சரமாரியாக தாக்கினர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள கல்மாணிக்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேல்பாண்டி (வயது38). விவசாயி.
தகராறு
இவருக்கும், இவரது தந்தை மாடசாமி (80), அண்ணன் மகாராஜன் (42) ஆகியோர்களுக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. நேற்று வேல்பாண்டியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் (33) தங்களது குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்தில் தேங்காய்கள் பறித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மாடசாமி, மகாராஜன் ஆகியோர் வேல்பாண்டியிடம் உங்களுக்கு இங்கு பங்கு கிடையாது என்று கூறி உள்ளனர். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மாடசாமி, மகாராஜன் ஆகியோர் சேர்ந்து வேல் பாண்டியை கம்பால் சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளாலும் வெட்டினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி விஜயநாரா யணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாடசாமி மற்றும் அவரது மகன் மகாராஜனையும் தேடி வருகின்றனர்.