உள்ளூர் செய்திகள்

சசிகலா

அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் - சசிகலா

Update: 2022-06-26 12:59 GMT
  • சென்னையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்றார்.
  • அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி என்றார்.

திருவள்ளூர்:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், தொண்டர்களைச் சந்திக்க சென்னையில் இருந்து திருத்தணி புறப்பட்டார் சசிகலா. சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக சென்ற சசிகலா திருத்தணி அடைந்தார். அங்கு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரிசெய்யப்படும்.

அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி

நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க பாடுபடுவேன். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2-வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும்.

தி.மு.க.வை தான் எப்போதும் எங்கள் எதிரியாகப் பார்ப்போம்.

வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News