உள்ளூர் செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

மண்பானை, அடுப்புகளுடன் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-06 09:43 GMT   |   Update On 2023-11-06 09:43 GMT
  • மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் மண் அடுப்புகளுடன் சேலம் கோட்டையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஆர்ப்பாட்டத்திற்கு குலாலர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.

சேலம்:

சேலம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் மண் அடுப்புகளுடன் சேலம் கோட்டையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குலாலர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது:- பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

அதேபோல் களி மண்ணால் ஆன மண்பானை மற்றும் அடுப்பினை தமிழக அரசே கொள்முதல் செய்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் தொழில் செய்ய தேவையான களிமண்ணை அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஏரிகள், ஆற்றில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

தமிழக அரசின் காதிகிராப்ட் விற்பனை பிரிவு அலுவலகத்தில் நிரந்தரமாக மண்பாண்டத்தினால் ஆன பொருட்களை விற்பனை செய்ய இடம் ஒதுக்க வேண்டும். மழைக்கால நிவாரண நிதியை மற்ற சமுதாயத்திற்கு கொடுத்தது போல் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வீடு கட்டி வசிக்க இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News