உள்ளூர் செய்திகள்

சேலம் மாநகரப் பகுதிகளில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம்- போக்குவரத்து மாற்றம்

Published On 2023-09-19 09:55 GMT   |   Update On 2023-09-19 09:55 GMT
  • மூக்கனேரி யில்‌ கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள்‌ நாளை நண்பகல்‌ 12 மணிக்குள்‌ கொண்டு சென்று கரைத்திடல்‌ வேண்டும்‌.
  • விநாயகர்‌ சிலை கரைத்தல்‌ சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல்‌ படையினர்‌ உட்பட மொத்தம்‌ 1232 காவலர்கள்‌ ஈடுபட உள்ளனர்‌.

சேலம்:

சேலம் மாநகரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (20-ந் தேதி) காலை 10 மணிக்குள் சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து எடுத்துச் சென்று, திட்டமிட்ட நீர்நிலைகளில் கரைத்திடல் வேண்டும்.

இவற்றுள் மூக்கனேரி யில் கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள் நாளை நண்பகல் 12 மணிக்குள் கொண்டு சென்று கரைத்திடல் வேண்டும்.

இந்து அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை காலை 11 மணிக்குள் சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து எடுத்து, ஊர்வலம் புறப்படும் இடமான எல்லை பிடாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வந்து உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திடல் வேண்டும்.

மேற்படி விநாயகர் சிலை கரைத்தல் சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1232 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

சேலம் மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலப் பாதையான எல்லை பிடாரியம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரையிலான சாலையில் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்யப்படுகின்றது.

மாற்று வழிப்பாதை விவரம்

ஊர்வலப்பாதை சுந்தர் லாட்ஜ் முதல் அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றுபாதை அண்ணா பூங்கா, 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு மற்றும் அஸ்தம்பட்டி. வழியாக போக்குவரத்து மாற்றபட்டுள்ளது. இதேபோல் அஸ்தம்பட்டி முதல் மூக்கனேரி வரையான ஊர்வலப்பாதை மாற்றாக அஸ்தம்பட்டி, கலெக்டர் பங்களா, ஐயந்திருமாளிகை, மற்றும் கன்னங்குறிச்சி வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநகர போலீஸ் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News