உள்ளூர் செய்திகள்
கூடமலை சித்தன்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பஸ் வசதி செய்து தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
- சேலம் மாவட்டம் கூடமலை அருகே உள்ள சித்தன் பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் 10 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
- எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் பஸ் வசதி, குடிதண்ணீர் வசதி உட்பட எந்த வசதியும் இல்லை.
சேலம்:
சேலம் மாவட்டம் கூடமலை அருகே உள்ள சித்தன் பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் 10 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் பஸ் வசதி, குடிதண்ணீர் வசதி உட்பட எந்த வசதியும் இல்லை.
எங்கள் ஊரில் 5-ம் வகுப்பு வரை உள்ள நிலையில் அதற்கு மேல் படிப்புக்கு கூடமலை செல்ல வேண்டியுள்ளது இதனால் மூன்று கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ் வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.