உள்ளூர் செய்திகள்
திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் மாயம்
- சங்கர் (26). இவருக்கும் சந்தியா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணமான மூன்று மாதத்தில் மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி கரிய பெருமாள் கரடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சங்கர் (26). இவருக்கும் சந்தியா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தியா கடைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் இது குறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணமான மூன்று மாதத்தில் மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.