தமிழ்நாடு செய்திகள்

Gas Shortage | விடுதிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு: விடுமுறை அறிவிக்கும் கல்லூரி நிர்வாகங்கள்

Published On 2026-03-12 07:51 IST   |   Update On 2026-03-12 07:51:00 IST
  • வளைகுடா பிராந்திய போர் இந்தியா முழுவதும் பெரும் சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.
  • கல்லூரிகளுக்கு விடுமுறையை நிர்வாகங்கள் அறிவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

சென்னை:

வளைகுடா பிராந்திய போர் இந்தியா முழுவதும் பெரும் சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால் கல்வி நிறுவனங்களிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள சில தனியார் கல்லூரிகளில் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உணவு சமைத்துக் கொடுக்க சிலிண்டர் இல்லாத காரணத்தினால், கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது. அதன்படி, கல்லூரிகளுக்கு விடுமுறையை நிர்வாகங்கள் அறிவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி, வருகிற 17-ந்தேதியில் இருந்து கல்லூரிகளுக்கு விடுமுறை விட முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்த சூழலில், தற்போது சிலிண்டர் தட்டுப்பாட்டால், முன்கூட்டியே விடுமுறையை அறிவித்து சில கல்லூரி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News