தமிழ்நாடு செய்திகள்

TN Fishermen | எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

Published On 2026-03-12 07:39 IST   |   Update On 2026-03-12 07:39:00 IST
  • கடலுக்கு சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
  • மீனவர்கள் 5 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது விசைப்படகை பறிமுதல் செய்தனர்.

தமிழக-புதுச்சேரி மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வதும், பலமுறை தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, 5 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

Tags:    

Similar News