உள்ளூர் செய்திகள்

காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்

Published On 2023-08-29 06:58 GMT   |   Update On 2023-08-29 06:58 GMT
  • காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடந்தது.
  • கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்கள் படித்து பயன்பெரும் வண் ணம் தன்னார்வ பயிலகம் இயங்கி வருகிறது.

இத்தன்னார்வ பயிலகத் தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2-ம் நிலை காவலர், சிறைக்காவ லர் மற்றும் தீயணைப்பாளர் பணி காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 3,359 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இத்தேர்விற்கு விண்ணப் பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம். இதற் கான தேர்வுகட்டணம் ரூ.250 ஆகும்.

இப்போட்டி த்தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இவ்வலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலா கவும் அல்லது 7867080168 என்ற அலைபேசியின் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News