உள்ளூர் செய்திகள்

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இல்லாததால் சலுகைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு

Published On 2023-05-08 08:34 GMT   |   Update On 2023-05-08 08:34 GMT
  • அபிராமம் சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இல்லை.
  • சலுகைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 125-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கூலி வேலை செய்து பிழைத்து வரு கின்றனர். இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயர்நிலை, மேல்நிலை படிக்க அரசுப்பள்ளி கிடையாது.

அபிராமத்தில் 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதுவும் முறையாக செயல்படுவதில்லை. மேலும் 2 தனியார் பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் அரசின் சலுகைகள் இன்று வரை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-

அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

இவர்களது பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்க்கு குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைபள்ளியில் படிக்க அரசு பள்ளி கிடையாது. 8-வது வரை மட்டுமே படிக்க அரசு பள்ளி உள்ளது. தமிழக அரசின் சலுகைகளான மருத்துவம், பொறியல் படிப்பவர்களுக்கு 7.5 சதவீத மாணவ- மாணவிகள் படிக்க அரசே முழு செலவையும் ஏற்கும் என்ற திட்டம், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவை அபிராமம் அதனை சுற்றியுள்ள மாணவர்களுக்கு கிடைக்க வாய்பில்லை.

இந்த சலுகைகளை பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்குதான் கிடைக்கும் என்ற நிலை நிலை உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது அபிராமம் பகுதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மூலகாரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளி தொடங்க கலெக்டரும், பள்ளி கல்வி துறையினரும் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News