உள்ளூர் செய்திகள்

கோவையில் பிளஸ்-1 மாணவி தற்கொலை முயற்சி

Published On 2023-05-30 09:30 GMT   |   Update On 2023-05-30 09:30 GMT
  • மாணவியின் தாய் நர்சிங் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
  • போலீசார் மாணவிக்கு அறிவுரை வழங்கினர்.

வால்பாறை,

வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு நர்சிங் படிப்பதற்கு விருப்பம் இருந்து வந்துள்ளது. இதனை அவரது தாயிடம் தெரிவித்தார்.

ஆனால் அவரது தாய், தனது மகள் நர்சிங் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் வாழ்கையில் விரக்கி அடைந்த மாணவி வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார்.

சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்தார். இதையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த அவரது தாய், தனது மகள் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இது குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி கூறுகையில் எனக்கு நர்சிங் படிக்க விருப்பம் உள்ளது. ஆனால் எனது தாய் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதனால் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவிக்கு அறிவுரை வழங்கிவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News