உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் ஜவுளிக்கடை உரிமையாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2023-08-06 14:44 IST   |   Update On 2023-08-06 14:44:00 IST
  • முகமது ஜாபர் பள்ளிவாசல் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
  • மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்த சிசிடிவி காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் பங்களாமேடு வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் முகமது ஜாபர்(23). இவர் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் கிழக்குத்தெருவில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்றார்.

அப்போது, பள்ளிவாசல் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கம் தேடி பார்த்தார்.

மேலும் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று, அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் சாலையில் நடந்து வரும் மர்ம நபர் ஒருவர் திரும்பிச்செல்லும்போது திருடு போனதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வது பதிவாகியுள்ளது.

தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News