உள்ளூர் செய்திகள்

படமுடி பாளையம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு

Published On 2023-01-20 09:35 GMT   |   Update On 2023-01-20 09:35 GMT
  • பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  • ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பரமத்திவேலுார்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் நேரில் பார்வையிட்டு சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாணவிகளுக்கு தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியல் படி வழங்கப்படுகிறதா, சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மாணவிகளுக்கு மதிய உணவினை அமைச்சர் கீதா ஜீவன் பரிமாறினார். பின்னர் அமைச்சருடன் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் ஸ்ரேயாசிங், சமூகநல அலுவலர் கீதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், குழந்தைகள் நலக்குழு தலைவர் சதீஷ்பாபு, வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்களும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய செயலாளர்கள் தன்ராசு, சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் அன்பழ கன், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, பேரூர் கழக செயலாளர்கள் ரமேஷ் பாபு, முருகன், கருணாநிதி, பெருமாள் என்கிற முருகவேல், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News