உள்ளூர் செய்திகள்
அரிசி கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது
- தனியார் விடுதியில் பதுங்கியவரை போலீசார் பிடித்தனர்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய ஜெயிலில் அடைப்பு
குனியமுத்தூர்,
குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை சார்பாக ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடித்து கைது செய்து, தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அரிசி கடத்தல் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான பாலக்காட்டை சேர்ந்த காஜா உசேன்(50) என்பவரை கடந்த 4 மாதமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் காஜா உசேன், கேரளாவில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்த பாலக்காடை சேர்ந்த காஜா உசேனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.