உள்ளூர் செய்திகள்

பரவி வரும் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-09-18 13:35 IST   |   Update On 2023-09-18 13:35:00 IST
  • பரவி வரும் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
  • சுகாதார குழுவினரை முடுக்கிவிட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மதுரை மாவட்ட கலெக்டருக்கு இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.கல்லுப்பட்டி பகுதியில் ஏழை,எளிய மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகள் காரணமாக தற்போது காய்ச்சல் பரவி வருகிறது.

தலைவலி, உடல் வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவில் பொதுமக்கள் சிகிச்சைக்காக சென்று வருகிறார்கள். டெங்கு பீதியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த பகுதியில் சுகாதார குழுவினரை முடுக்கிவிட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை, வெயில் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள சுகாதார நிலையை கண்டறிந்து பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்.

மேலும் மழைநீர் தேங்கா மலும், தேங்கி உள்ள தண்ணீரை உடனடியாக அகற்றுவதுடன், கொசு உற்பத்தியை தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News