மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பெண் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் இன்று தரிசனம்
- புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று மதுரை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- இந்த மாதத்தில் பஜனை செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது ஆகியவை வழக்கத்தில் உள்ளன.
மதுரை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் பஜனை செய்து வழிபடுவது, ஆலயங்களில் பிரம்மோற்சவங்கள் நடத்துவது ஆகியவை வழக்கத்தில் உள்ளன.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பெருமாளுக்கு உரிய பூஜைகளை செய்து வழிபடுவதோடு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கும்.
புரட்டாசி 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கள்ளழகர் பெருமாள் கோவில், ஒத்தகடை யோக நரசிம்ம பெருமாள் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், திருகோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில், உள்ளிட்ட ஆலயங்களில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்று கோஷம் எழுப்பி வழிபட்டனர்.