உள்ளூர் செய்திகள்

மதுரையில் பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2023-09-23 09:43 GMT   |   Update On 2023-09-23 09:43 GMT
  • புரட்டாசி முதல் சனிக்கிழமையில் மதுரையில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
  • முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தன.

மதுரை

ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாதம் பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாதத்தில் பலர் அசைவத்தை தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை விஷேச நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் வைணவ தலங்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறும். இதன் காரணமாக புரட்டாசி சனிக்கிழமை களில் வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று மதுரை நகரின் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டது. மூலவர் கூடலழகர் பெரு மாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 5 மணி முதல் மதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராள மானோர் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிரு ந்தன.

இதேபோல் மதுரை நகரில் உள்ள மதனகோபால சுவாமி கோவில், தெற்கு கிருஷ்ணன் பிரசன்ன வேங்கடேஸ்வர பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் மற்றும் ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில், காளமேகப் பெருமாள் கோவில், கைத்தறி நகர் பாலாஜி வெங்கடேஸ்வரர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News