உடலில் வெட்டுக்காயத்துடன் சுற்றித்திரிந்த குதிரை
- வாகனம் மோதியதில் குதிரை உடலில் வெட்டுக்காயத்துடன் சுற்றித்திரிந்தது.
- கால்நடை மருத்துவர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
மதுரை
மதுரை விளாங்குடி பகுதி யில் ஒரு குதிரை விபத்தில் அடிபட்டு கழுத்தில் தோல் கிழிந்து ரத்தக்காயத்துடன் சுற்றித்திரிந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கால்நடைதுறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மண்டல இணை இயக்குநர் நடராஜ குமார், உதவி இயக்குநர் சரவணன் உத்தரவின் பேரில், செல்லுர் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சத்யபிரியா, கால்நடை ஆய்வாளர் செல்வி மற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
தத்தனேரி மருத்துவ மனை அருகில் அடிபட்ட குதிரையை பிடித்து ஆம்புலன்ஸ் மூலம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் டாக்டர் கிருஷ்ணராஜ் தலைமையிலான குழுவினர் குதிரைக்கு காயம் பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.காயத்துடன் திரிந்த அந்த குதிரை யாருடையது? என்பது தொடர்பாக விசாரணை நடத்தியதில், கீரைத்துறை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை வரவழைத்து குதிரை ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக மதுரை விலங்குகள் நல ஆர்வலர் ஹசீஜா கூறுகையில், மதுரை ரிசர்வ் லைன், செல்லூர் ஆகிய பகுதிகளில் எண்ணற்ற குதிரைகள் நடுரோட்டில் திரிகின்றன. சாலையில் செல்லும் அவை வாகனங்களில் அடிபட்டு படுகாயம் அடைகின்றன.