உள்ளூர் செய்திகள்
- வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- முன்விரோதம் இருந்தது.
மதுரை
தத்தனேரி கண்மாய்கரை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் கருப்பசாமி(22). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் தத்தனேரி சுடுகாட்டு காளியம்மன் கோவில் அருகே சென்ற கருப்பசாமியை வழிமறித்து 17 வயது சிறுவன் உள்பட 6 பேர் அவரை அவதூறாக பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் கருப்பசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து 17 வயது சிறுவன், அய்யனார்(20), காளிதாஸ், சித்திரைச் செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஹரிஸ், குரேநாதனை தேடி வருகின்றனர்.