சட்டசபை தேர்தல் 2026: அ.தி.மு.க. - பா.ம.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
- சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.
- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர்.
இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பா.ம.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்றையும் கொடுக்க அ.தி.மு.க தலைமை சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலின்போது பா.ம.க.வுக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கியது.
சட்டசபை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் பா.ம.க. போட்டி என்பது குறித்து இன்றே தெரிந்து விடும்