உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கும்

Published On 2022-06-10 07:54 GMT   |   Update On 2022-06-10 07:54 GMT
  • பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது.

கன்னியாகுமரி:


கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.


இதில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை விவேகானந்தா கேந்திர நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அதே சமயம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரித்து வருகிறது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்துவருகிறார்கள்.

இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.


தினமும் காலை ௮ மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணிவரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகா னந்த கேந்திர தொழி லாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டு தேர் இழுப்பதற்கு நாளைக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்குவதற்கு பதிலாக 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்குகிறது.

இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News