உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் பேசிய காட்சி.

காமராஜர் பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்- தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-07-04 09:13 GMT   |   Update On 2022-07-04 09:13 GMT
  • காமராஜர் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • காட்டுச் செடிகள் படர்ந்து மணல்மேடாகி கிடக்கும் குளங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப், ரெக்ஸ் பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பெரியசாமி, இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், மாணவரணி செயலாளர் அகஸ்டின், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், விவசாய அணி செயலாளர் சரவணன், மீனவர் அணி செயலாளர் விக்ரம், தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார் மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாநகரச் செயலாளர் உதயசூரியன் அவைத்தலைவர் மதியழகன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி முத்துக்குமரன் ஆத்தூர் நகர செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் பொன்மணி, ஜேசு செல்வி, சுந்தர், காமராஜ், சசிகுமார், வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 30-ந்தேதி தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் மரணம் அடைந்த இளைஞர் சாம்ராஜ் மரணத்திற்கு காரணமான தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய, மாநில அரசுகள் ரூ.2 கோடி இழப்பீடு பெற்று மரணம் அடைந்த சாம்ராஜ் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அந்த நிறுவனங்கள் மீது நேரடி விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சாம்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வருகின்ற ஜூலை 15-ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தூத்துக்குடிக்கு வருகை தரும் சமத்துவ தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கி பாராட்டு விழா நடத்துவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குளங்கள் அனைத்தும் அமலைச் செடிகள் ஆக்கிரமித்து காட்டுச் செடிகள் படர்ந்து மணல்மேடாகி கிடக்கும் குளங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என கடந்த ஒரு வருடமாக மாவட்ட கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வருகின்ற மழைக்காலத்திற்கு முன்பாக குளங்களில் உள்ள அமலை செடிகள், காட்டுச் செடிகளை அப்புறப்படுத்தி குளங்களை தூய்மைப்படுத்த வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News