என் மலர்
நீங்கள் தேடியது "சமத்துவ மக்கள் கழகம்"
- இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
நம் நாட்டில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன.
இவை தவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கி வருகின்றன.
இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து உள்ளது.
இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 3-வது கட்டமாக கடந்த 2021-ம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கட்சிகளும் விரைவில் நீக்கப்பட உள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் 39 கட்சிகள் இருக்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.ம.க. தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது.
இதேபோல் ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவு, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பதிவு, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகத்தின் பதிவு, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
- ஏழை எளிய மாணவர்கள், கற்பதற்காக கல்வி சாலைகளை திறந்து எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர்.
- எங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை:
சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில்,
பெருந்தலைவர் காமராஜர் ஏழை எளிய மாணவர்கள், கற்பதற்காக கல்வி சாலைகளை திறந்து எண்ணற்ற பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர். மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் காலை உணவு என்கிற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு மகத்தான திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
தற்போது கல்லூரிகளுக்கிடையே உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் ஆயிரம் கோடி செலவில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் ஒரு சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் உயர் கல்வியி னுடைய வளர்ச்சிக்காக முதல்வர் எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகளையே பெருந்தலைவர் காமராஜர் பெயரிலேயே அமைந்திருக்க இந்த திட்டம் அமைந்துள்ளது எனவும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு அறிவித்துள்ள திட்டத்திற்கு எங்களது பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- மருது சகோதரர்களின் படத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- ஏராளமான நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
சென்னை:
மருது சகோதரர்களின் 222-வது நினைவு நாளான இன்று சமத்துவ மக்கள் கழகம் சார்பாக கிண்டியில் அமைந்துள்ள அவர்களது சிலைக்கு அருகே உள்ள படத்திற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் பொருளாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் ஜெபராஜ் டேவிட், ஆர்.கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், மாவட்ட பொருளாளர் சாமுவேல், வட சென்னை மாவட்டத் துணைச் செயலாளர்கள் தாஸ், சதீஷ், ஆனந்தலிங்கம், ஆர்.கே. நகர் பகுதி நாடார் பேரவை செயலாளர் பாக்யராஜ், திருவொற்றியூர் பகுதி துணைச் செயலாளர் அன்பரசன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
- காமராஜர் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- காட்டுச் செடிகள் படர்ந்து மணல்மேடாகி கிடக்கும் குளங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப், ரெக்ஸ் பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பெரியசாமி, இளைஞரணி செயலாளர் டேனியல்ராஜ், மாணவரணி செயலாளர் அகஸ்டின், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், விவசாய அணி செயலாளர் சரவணன், மீனவர் அணி செயலாளர் விக்ரம், தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார் மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், மாநகரச் செயலாளர் உதயசூரியன் அவைத்தலைவர் மதியழகன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி முத்துக்குமரன் ஆத்தூர் நகர செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் பொன்மணி, ஜேசு செல்வி, சுந்தர், காமராஜ், சசிகுமார், வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 30-ந்தேதி தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் மரணம் அடைந்த இளைஞர் சாம்ராஜ் மரணத்திற்கு காரணமான தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய, மாநில அரசுகள் ரூ.2 கோடி இழப்பீடு பெற்று மரணம் அடைந்த சாம்ராஜ் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அந்த நிறுவனங்கள் மீது நேரடி விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சாம்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், வருகின்ற ஜூலை 15-ந்தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நலவாரிய தலைவராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணனை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தூத்துக்குடிக்கு வருகை தரும் சமத்துவ தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கி பாராட்டு விழா நடத்துவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குளங்கள் அனைத்தும் அமலைச் செடிகள் ஆக்கிரமித்து காட்டுச் செடிகள் படர்ந்து மணல்மேடாகி கிடக்கும் குளங்களை தூய்மைப்படுத்த வேண்டும் என கடந்த ஒரு வருடமாக மாவட்ட கலெக்டரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வருகின்ற மழைக்காலத்திற்கு முன்பாக குளங்களில் உள்ள அமலை செடிகள், காட்டுச் செடிகளை அப்புறப்படுத்தி குளங்களை தூய்மைப்படுத்த வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






