கோவையில் ஓட, ஓட விரட்டி வெட்டிய சம்பவத்தில் சிக்கிய 3 பேரிடம் விசாரணை
- சமூக வலைதள மோதலால் 2 பேரை கொல்ல முயன்றது அம்பலம்
- தப்பிய ஓடிய 5 பேரை பிடிக்க போலீசார் வலை விரித்து உள்ளனர்
கோவை,
கோவை காந்திமாநகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 22). இவர் மற்றும் இவரது நண்பரான காந்திபுரம் 9-வது வீதியைச் சேர்ந்த நித்தீஷ் (24) ஆகியோர் மீது கோவை கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக ரஞ்சித்குமாரும், நித்தீசும் நேற்று முன்தினம் கோர்ட்டு க்கு வந்தனர். அவருடன் கார்த்திக் என்பவரும் வந்திருந்தார்.
கோர்ட்டில் ஆஜராகி விட்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கெர்ணடு இருந்தனர். ராம்நகர் ராமர்கோவில் அருகே சென்றபோது அவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கும்பல் வழிமறித்தது. அவர்கள் ரஞ்சித்குமாரை யும், நித்தீசையும் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். அவர்கள் 2 பேரும் காயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கார்த்திக் தப்பி ஓடி விட்டார். இதுதொடர்பாக கோவை மாநகர போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ரஞ்சித், நித்தீஷை 8 பேர் அடங்கிய கும்பல் அரிவாளால் வெட்டியது கோவில்பாளையத்தை சேர்ந்த ரவி என்பவர் தலைமையில் கும்பல் என தெரியவந்தது.
கோவை காந்திமாநகரை சேர்ந்த ரஞ்சித், காந்திபுரம் 9-வது வீதியை சேர்ந்த நித்தீஷ் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்து உள்ளனர். கோவில்பாளையத்தை சேர்ந்த ரவி என்பவர் அந்த பகுதியில் ரவுடியாக உள்ளார். இவரது தலைமையில் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஞ்சித்-ரவி இடையே யார் பெரியவர் என்ற ஈகோ மோதல் ஏற்பட்டு வந்தது. இதன்கார ணமாக அவர்கள் 2 பேரும் அடிக்கடி கும்பலாக மோதி வந்தனர். இந்த நிலையில் ரஞ்சித் கும்பல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளம் ஒன்றில், கோவில்பாளையம் ரவி குறித்து அவதூறு கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்த னர்.
அது ரவி கும்பலை ஆத்திரப்படுத்தியது. எனவே அவர்கள் ரஞ்சித் கும்பலை போட்டு தள்ளுவது என முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் 2 பேரையும் கடந்த ஒரு வாரமாக வேவு பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் ரஞ்சித், நித்தீஷ் ஆகியோர் நண்பர் கார்த்திக் உடன் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கோவை நீதிமன்றத்துக்கு செல்லும் தகவல், கோவில்பாளையம் ரவி கும்பலுக்கு தெரிய வந்தது. எனவே அவர்களை போட்டுத்தள்ளுவது என ரவி கும்பல் முடிவு செய்தது.
அதன்படி அவர்கள் 8 பேருடன் மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டு சென்று ரஞ்சித்-நித்தீஷை அரிவாளால் வெட்டியது தெரிய வந்து உள்ளது. இந்த நிலையில் அந்த கும்பலில் 3 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மூலம் தப்பிய ஓடிய 5 பேரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், ரஞ்சித்-நித்தீஷை அரிவாளால் வெட்டிய 8 பேர் கும்பலில் 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து உள்ளோம். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சமூகவலைதளத்தில் ஏற்பட்ட மோதல் அரிவாள் வெட்டு சம்பவத்தில் முடிந்தது தெரியவந்து உள்ளது.