உள்ளூர் செய்திகள்
படுகாயமடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்- 4 பேர் படுகாயம்
- நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேராக மேலப்பிடாகை கடைத்தெரு அருகே மோதிக் கொண்டது.
- படுகாயமடைந்த 4 பேரை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டியை அடுத்த மேலப்பிடாகை கடைத்தெரு அருகே திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அரசு பஸ் சென்றது.
அப்போது எதிர் திசையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேராக மேலப்பிடாகை கடைத்தெரு அருகே மோதி கொண்டது.
இந்த விபத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர மரத்தின் மீது மோதி நொறுங்கியது.
இதில் அரசு பஸ் ஓட்டுநர் பரமேஸ்வரன், பயணிகள் அமீர், சுப்பையன் மற்றும் தனியார் பஸ்சின் ஓட்டுனர் கலையரசன் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களை மீட்டு நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர்.
இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.