சிவகிரி அரசு விசைத்தறி கூட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் கொள்முதல் செய்யப்படாமல் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தேக்கம் அடைந்தது.
- காலத்திற்கேற்ப தறிகளை நவீனப்படுத்தி புதிதாக ஆட்கள் நியமித்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூரில் 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு பஞ்சாலை க்கழகத்தின் மூலம் விசைத்தறி கூடம் அமைக்கப்பட்டது.
இங்கு பள்ளி மாண வர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் சீருடைகள். போலீஸ் சீரு டைகள், இலவச வேட்டி, சேலைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது.
தறி ஓட்டுபவர்கள், வைண்டிங்மேன், கிளீனர், ஜாப்பர், ஹெல்ப்பர், தோட்டக்காரர் என 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.
குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தினமும் 3 சிப்ட் இயங்கி வந்தநிலையில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் கொள்முதல் செய்யப்படாமல் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தேக்கம் அடைந்தது.
இதனால் கடந்த 20 ஆண்டுகள் முன்பு 44 தறிகள் கொண்ட ஒரு யூனிட் நிறுத்தப்பட்டு, தொழி லாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டு 48 தறிகளுடன் மட்டுமே இயங்கி வந்தது.
புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட வில்லை. சம்பளம் பற்றாக்குறை யால் தொழி லாளர்கள் பலர் வெளியேறி விட்டனர்.
இந்நிலையில் வெறும் 24 தறிகள் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்போது இயங்கும் தறிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைந்து உள்ளது. இதை மட்டுமே நம்பி சுமார் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 20ஆக குறைந்து விட்டது.
தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு தினமும் 430 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்க ப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சம்பள ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் போடப்படவில்லை.
இந்நிலையில் நிர்வாக த்தின் சார்பில் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் தற்பொழுது தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான சிவகிரி விசைத்தறிக்கூடம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 73 லட்சம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
நடப்பு ஆண்டில் மாதம் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விசைத்தறிக்கூடம் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த விசைகூடம் தொடர்ந்து லாபத்தில் இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் காலத்திற்கேற்ப தறிகளை நவீனப்படுத்தி புதிதாக ஆட்கள் நியமித்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். நிறுவனத்தை லாபத்தில் இயக்க ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்.
அந்த குழுவில் தொழிலாளர்களை முன் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.