உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2022-12-15 14:42 IST   |   Update On 2022-12-15 14:42:00 IST
  • மருந்து கடையில் மருந்து வாங்கி விட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
  • இதுகுறித்து வேலுச்சாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே பள்ளக்காட்டுபுதூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 48).

சம்பவத்தன்று இவர் சென்னிமலை-காங்கயம் ரோட்டில் மாரியம்மன் கோவில் கட்டிடத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் மருந்து வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார்.

கடைக்கு முன்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மருந்து கடையில் மருந்து வாங்கி விட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும்.

பின்னர் இதுகுறித்து வேலுச்சாமி சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News