உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பட்டு ஜமக்காளம் வழங்கி வரவேற்பு

Published On 2022-08-26 09:53 GMT   |   Update On 2022-08-26 09:53 GMT
  • பவானி நகர் அந்தியூர் பிரிவு ரோட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பட்டு ஜமக்காளம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • பின்னர் அவர் பொது மக்களிடம் வாகனத்தில் அமர்ந்தபடி மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பவானி, ஆக. 26-

ஈரோடு மாவட்டத்திற்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அரசின் முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோபிசெட்டி பாளையம் வருகை தந்தார்.

கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் வாகனத்தில் அத்தாணி, ஆப்பக்கூடல், ஜம்பை வழியாக பவானி நகருக்கு வருகை தந்தார்.

பவானி நகர் அந்தியூர் பிரிவு ரோட்டில் நகரச் செயலாளர் நாகராசன் தலைமையிலும், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ முன்னிலையில் பட்டு ஜமக்காளம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் பொது மக்களிடம் வாகனத்தில் அமர்ந்தபடி மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News