உள்ளூர் செய்திகள்

திருக்குறளில் உலக சாதனை புரிந்த கோவில்பட்டி எம்.எம். வித்யாஸ்ரம் பள்ளி மாணவன் பிரசாத்துக்கு பரிசு, கேடயம் வழங்கியபோது எடுத்தபடம்.


திருக்குறளில் உலக சாதனை புரிந்த பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா

Published On 2022-07-09 08:42 GMT   |   Update On 2022-07-09 08:42 GMT
  • 8-ம் வகுப்பு மாணவன் பிரசாத் ஒரு நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி உலக சாதனை புரிந்த தற்காக அவருக்கு நினைவு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினர்.
  • பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள எம்.எம். வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் திருக்குறளில் உலக சாதனை புரிந்த பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.

பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் ராஜசேகர், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் குறித்தான சிறப்புகளை குறித்து சிறப்புரையாற்றினர்.

விழாவில் 8-ம் வகுப்பு மாணவன் பிரசாத் ஒரு நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி உலக சாதனை புரிந்ததற்காக அவருக்கு நினைவு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினர். மேலும் விழாவில் நம்பிக்கை ஊட்டும் தமிழ் கவிதைகள், தமிழ் மொழியின் தொன்மை, மற்றும் மேன்மை, குறித்த வேடம் புனைந்த சிந்தனைக்குரிய உரையாடல் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்திக் காட்டினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தலைமையில் தமிழ் துறையுடன் இணைந்து அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும், செய்திருந்தனர்.

Tags:    

Similar News