உள்ளூர் செய்திகள்

பேரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-19 14:37 IST   |   Update On 2023-07-19 14:37:00 IST
  • மாநில பொருளாளர்ஆறுமகம் தலைமை தாங்கினார்.
  • தொண்டாமுத்தூர் வட்டார பகுதி நிர்வாகிகள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வடவள்ளி,

கோவை பேரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில பொருளாளர்ஆறுமகம் தலைமை தாங்கினார்.

துணைச்செயலாளர் வி.பி.ராமசாமி, செல்வநாயகி, பலராம், முகமது அலி, காளிமுத்து, ஆறுச்சாமி முன்னிலை வகித்தனர். இதில் தொண்டாமுத்தூர் வட்டார பகுதி நிர்வாகிகள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது நரசீபுரம் பச்சாவயல் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வீடு இல்லாதவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

Similar News