உள்ளூர் செய்திகள்

தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி.

தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-14 09:03 GMT   |   Update On 2022-07-14 09:03 GMT
  • வீட்டு உபயோக பொருட்களை தனியாக சேகரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
  • வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் சேகரித்து தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார்.முன்னதாக தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை உறுதிமொழி நகராட்சி கமிஷனர் ஹேமலாதா தலைமையில் எடுத்துக் கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் வேதாரண்யம் நகராட்சி என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகத்தோடு நகராட்சியை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் குப்பைகளை பச்சை நிற தொட்டியிலும் மக்காத குப்பைகளை நீல நிற தொட்டியிலும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை தனியாக சேகரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வசம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில் நகர்மன்றத் துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம்,நகர்மன்ற உறுப்பினர்கள் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பள்ளி மாணவ -மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News