பண்ருட்டியில் வங்கி பெண் அதிகாரி பெற்றோர் மீது தாக்குதல்
- 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- சிவரஞ்சனியின் தந்தை பாபு, தாயார் ரூபாவதி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி எல்.என்புரம் எஸ்.பி.ஐ.காலணி நேருநகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சிவரஞ்சனி (வயது 35)இவர் திருப்பூரில் வங்கி ஒன்றில் துணைமேலாளராக பணிபுரிந்து வந்தார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடாஜலபதிபாபு என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று வெங்கடாஜலபதி ராஜியும் அவரது தந்தை கணேசன் ஆகிய இருவரும் குழந்தையை பார்க்க பண்ருட்டிக்கு வந்துள்ளனர்.
அப்போது சிவரஞ்சனியின் தாய்,தந்தையரை அசிங்கமாக திட்டி ஏன் குழந்தையை எங்களிடம் காட்டமாட்டீர்கள் எனக் கேட்டு கையாலும், தடியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த சிவரஞ்சனியின் தந்தை பாபு, தாயார் ரூபாவதி பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார், எஸ்.ஐ. புஷ்பராஜ்மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.