உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சில் முதல்முறையாக பெண் கண்டக்டர் நியமனம்

Published On 2022-06-24 09:42 GMT   |   Update On 2022-06-24 09:42 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் பணிமனை 1,2 ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகள் மூலம் 171 நகர மற்றும் புறநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

600-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். அண்மையில் வாரிசு அடிப்படையில் 10 பேருக்கு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் இதர பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் பணிக்காலத்தின் போது உயிரிழந்த பயணச்சீட்டு பரிசோதகரான முனியப்பன் அவரது மகள் இளையராணி (வயது 34) என்பவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக அரசு டவுன் பஸ்சில் (ராசிபுரம், சேலம், பஸ் எண் 52) நடத்துனர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து இளையராணி கூறியது:

எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

தந்தை இறப்பால் வாரிசு வேலை கிடைத்தது. 10 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது நான் மட்டும் பெண். இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன் என்றார் இளையராணி.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நாமக்கல் மண்டல மேலாளர் பாண்டியன் கூறியதாவது:

இதற்கு முன்பாக நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பஸ்சில் பெண் கண்டக்டர்கள் பணியாற்றினார்களா? என்பது சரிவர தெரியவில்லை சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.

தற்போது ராசிபுரம் பணிமனையில் வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு பெண் கண்டக்டர் பணி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News