தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை என்பது வதந்தி - தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விளக்கம்

Published On 2026-01-03 12:16 IST   |   Update On 2026-01-03 12:16:00 IST
  • தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது?

சென்னையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* எம்.பி. ஜோதிமணியின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.

* தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்துகள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

* உட்கட்சி விவகாரங்களை நிர்வாகிகள் பொதுவெளியில் பேசக்கூடாது.

* கட்சியின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நிர்வாகிகள் நடக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தேலைமை பேச்சு நடத்தி வருகிறது.

* தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளது.

* த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது என்பது வதந்தி.

* தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என காங்கிரசில் யார் கூறியது?

* தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவே குழு அமைக்கப்பட்டுள்ளது.

* முதலமைச்சரை ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

* கூட்டணி தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

* கூட்டணி தொடர்பாக தி.மு.க.வுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News