உள்ளூர் செய்திகள்

மணமக்களை டி.டி.வி. தினகரன் வாழ்த்தி பேசிய காட்சி.

அ.ம.மு.க. பிரமுகர் நடராஜ் இல்ல திருமண விழா: திருப்பூர் வந்த டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

Published On 2022-06-09 17:05 IST   |   Update On 2022-06-09 17:05:00 IST
  • மணமக்களை டி.டி.வி. தினகரன் வாழ்த்தி பேசினார்
  • பெருமாள் கோவில் அருகே டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர், 

அ.ம.மு.க.பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி தலைவருமான மலையாண்டவர் ஏ.ஆர்.நடராஜ்-நிர்மலா தம்பதியின் மகன் லோகேஷ் மற்றும் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்கிற மாரிமுத்து-ஈஸ்வரி தம்பதியின் மகள் வித்யா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று இரவு திருப்பூர் ராமசாமி கவுண்டர்முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் உடுமலை சி.சண்முகவேலு, அமைப்பு செயலாளர் சேலஞ்சர் துரை ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி அவர் பேசினார். விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கே.கிங், மாநகர் மாவட்ட துணை செயலாளர் சூர்யா செந்தில் மற்றும் அ.ம.மு.க. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அ.ம.மு.க. பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலையாண்டவர் நடராஜ் நன்றி கூறினார்.

முன்னதாக திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பெருமாள் கோவில் முன்பும், வடக்கு மாவட்டத்தின் சார்பில் சந்தைப்பேட்டையிலும் அ.ம.மு.க. பொதுச்செயலளார் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பூர் பெருமாள் கோவில் அருகே திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் விசாலாட்சி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் புல்லட் ரவி, சூர்யா செந்தில் , மாநகர் மாவட்ட பொருளாளர் சேகர் என்ற ஜெகநாதன், மாநகர் மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ரத்தினசாமி, மாநகர் மாவட்ட அம்மா இளைஞரணி செயலாளர் பெஸ்ட் தம்பு என்ற சண்முகசுந்தரம், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முத்துக்குட்டி, பொதுக்குழு உறுப்பினர் குட்வின் பழனிசாமி, அம்மா பனியன் தொழிற்சங்கம் சுரேஷ்ராஜா, மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பச்சமுத்து உள்பட அ.ம.மு.க. பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News