உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

நீடாமங்கலம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

Published On 2023-11-20 09:25 GMT   |   Update On 2023-11-20 09:25 GMT
  • மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.
  • 20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் பள்ளிப்பருவ நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.

தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.

பின்னர், மாணவ- மாணவிகள் ஆசிரியர்களுடன் வாழ்க்கை நிகழ்வுகளை கலந்துரையாடினர்.

பின்னர், அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து, அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் மாணவர் அருண் கூறுகையில்:-

ஒரே பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் இன்று பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறோம்.

அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும் என்ற எங்களது முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

20 ஆண்டுகள் கழித்து சந்தித்த இந்த நிகழ்வு எங்கள் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும் என்றார்.

Tags:    

Similar News