மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பேசிய காட்சி.
விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையில் காய்கறிகளை மாலையாக அணிந்து வந்த தொண்டர்.
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி நெல்லையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
- ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்க ளின் விலைவாசி உயர்வு, சட்டம் -ஒழுங்கு சீர்கேடுகள் முதலான வற்றை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும் இன்று நெல்லை யில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.இதில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆவரை பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, முன்னாள் அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செய லாளர் முத்துப்பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், திசையன் விளை பேரூ ராட்சி தலைவர் ஜான்சி ராணி, ஒன்றிய செய லாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிர மணியன், கே.பி.கே. செல்வராஜ், அந்தோணி அமலராஜா, பகுதி செயலாளர்கள் சண்முக குமார், திருத்துச் சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், வக்கீல் ஜெனி, சிந்தாமணி ராமசுப்பு, கவுன்சிலர் சந்திரசேகர், செவல் முத்துசாமி, வக்கீல்கள் ஜெயபாலன், ரமேஷ், அன்பு அங்கப்பன், பாளை பகுதி மாணவரணி செய லாளர் ஜெய்சன் புஷ்பராஜ், மேலப்பா ளையம் பகுதி பாசறை செயலாளர் சம்சு சுல்தான், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனி முகம்மது சேட், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், மணி, பாறையடி மணி, ஆபீஸ் மணி, நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விலைவாசி உயர் வை கண்டித்து அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் உடலில் காய்கறிகளை மாலையாக அணிவித்து வந்திருந்தார்.