உள்ளூர் செய்திகள்

கோவை அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-08-07 14:54 IST   |   Update On 2023-08-07 14:54:00 IST
பழனிசாமி தனது மகள் ஹேமலதாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கோவை,

சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பை சேர்ந்தவர் பழனிசாமி (48). இவர் அவரது மகள் ஹேமலதாவுடன் (18) மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் ஆலாங்கொம்பு ரோட்டில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஹேமலதா, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மேட்டுப்பாளையம் பாரதியார் நகரை சேர்ந்த பர்கான் (16), முகமது அனாஸ் (18) ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News