கோவை கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மூதாட்டி மனு
- 5 மகள்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் தெரிவித்தார்.
- சொத்துகளை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
கோவை,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவருக்கு 2 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். இவரது சொத்துகளை தனது 2 மகன்களும் அபகரித்துக்கொண்டு தன்னை கவனிக்காமலும், 5 மகள்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், சொத்துகளை மீட்டு தரக்கோரி ரங்கநாயகி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
இதேபோல் மோப்பரிபாளையம் பேரூராட்சி எம் பாப்பம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பேரூராட்சியால் எங்கள் பகுதிக்கு கடந்த 2013 ம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. தனிநபர் ஒருவர் இதனை ஆக்கிரமித்து கற்களை கொட்டி வைத்து செல்ல வழி இல்லாமல் செய்துள்ளார். இது குறித்து அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.