கோவையில் வாலிபரிடம் 7.68 லட்சம் மோசடி
- பணம் கொடுத்தால் சுற்றுலாதுறையில் வேலை வாங்கி கொடுக்க முடியும் என ஆசை வார்த்தை கூறினர்.
- நவீன்குமார் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் சூசையாபுரத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(வயது33). இவர் படித்து முடித்து விட்டு அரசு வேலை தேடி வந்தார்.
இந்தநிலையில் நவீன்குமாருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கோவை நீலாம்பூர் அருகே உள்ள மயிலம்பட்டியை சேர்ந்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
2 பேரும் நவீன்குமாரிடம், தங்களுக்கு தெரிந்த அதிகாரி சுற்றுலாதுறையில் வேலை பார்ப்பதாகவும், பணம் கொடுத்தால் வேலை வாங்கி கொடுக்க முடியும் என ஆசை வார்த்தை கூறினர்.
இதனை உண்மை என நம்பிய அவர் 2 பேரிடமும் அரசு வேலைக்காக ரூ.7 லட்சத்து 68 ஆயிரம் பணத்தை கொடுத்தார். ஆனால் அவர்கள் கூறிய படி வேலை வாங்கி கொடுக்க வில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் தான் ஏமாற்ற ப்பட்டதை உணர்ந்த நவீன்குமார் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சுற்றுலா துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரை ஏமாற்றி பணம் பறித்த பரத்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.