உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-31 08:57 GMT   |   Update On 2022-05-31 08:57 GMT
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பள்ளிப்பாளையம்:

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் கொத்தமங்கலம் கிராமம் அரசம்பாளையம் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த பொதுஇடத்தில்  1.5 ஏக்கர் பொது இடத்தை ஊராட்சி மன்றத்தின் மூலம் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்ற நடவடிக்கை மேற்ெகாள்ளப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள  மதுரை வீரன் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள இடத்தில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது. மேலும் குழந்தைகள் விளையாடும் இடமாகவும் இருந்தது. காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டும் இடமாக மாற்றும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மீண்டும்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டுமென  அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் தலைமையில் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்தில்  தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்.சுந்தரம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், துணைத்தலைவர் கண்ணையன், அரசம்பாளையம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News