செய்திகள்
கோப்புபடம்

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் - கடலூர் அருகே பரபரப்பு

Published On 2020-12-11 13:45 IST   |   Update On 2020-12-11 13:45:00 IST
கடலூர் அருகே கல்லறைக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லிக்குப்பம்:

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் பகுதியில் கிறிஸ்தவர்கள் கல்லறைக்கு செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் இறந்தவர்களின் சடலத்தை ஓடை வழியாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்பு அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் குளோப் மற்றும் பொதுமக்கள், நிர்வாகிகள் ஆகியோர் கல்லறைக்கு செல்லக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அறிந்த தாசில்தார் பலராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தற்காலிகமாக ஓடையை ஒட்டி உள்ள புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News