செய்திகள்
மலைகிராம மக்களுக்கு விநியோகிக்க பொங்கல் பரிசு பொருட்கள் கழுதையில் கொண்டு செல்லப்பட்ட காட்சி

வாணியம்பாடி அருகே உள்ள மலைகிராமத்திற்கு கழுதையில் சென்ற பொங்கல் பரிசு பொருட்கள்

Published On 2020-01-08 07:18 GMT   |   Update On 2020-01-08 07:18 GMT
வாணியம்பாடி அருகே உள்ள மலை கிராமத்திற்கு பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய மூட்டைகள் கழுதையில் ஏற்றி செல்லப்பட்டது.
வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு, 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்திற்கு சாலை வசதி, மின்சார வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. நெக்னாமலை மக்கள் மலையிலிருந்து மழைநீர் வழிந்தோடும் பாதையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்பட்டாலும் யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் டோலி கட்டி மலை அடிவாரத்துக்கு தூக்கி செல்கின்றனர். இந்த நிலையில் மலை கிராம மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இன்று காலை பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய மூட்டைகள் நெக்னாமலை அடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டன. சாலை வசதி இல்லாததால் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தூரம் கழுதைகள் மூலம் பொங்கல் பரிசுபொருட்கள் இன்று கொண்டு செல்லப்பட்டன.

தாசில்தார் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் குமார், கூட்டுவு சங்க தலைவர் திருப்பதி ஆகியோர் முன்னிலையில் பொங்கல் பொருட்களை கழுதைகளில் ஏற்றி சென்றனர்.
Tags:    

Similar News