செய்திகள்

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Published On 2019-03-19 10:56 GMT   |   Update On 2019-03-19 10:56 GMT
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் உழைத்திட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். #LSPolls #DMKManifesto #DMK #MKStalin
சென்னை:

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.
மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சலுகை வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் உழைத்திட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உழைத்திடுவீர்.

நாற்பதுக்கு 40, பதினெட்டுக்கு 18 என 100 சதவீதம் வெற்றிக்காக வேறு சிந்தனையின்றி உழைத்திடுவீர்.

உங்களின் ஆதரவுடன் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக மக்களவையில் என்றும் குரல் கொடுப்போம். திமுக மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தரும் அரசியல் இயக்கங்கள், அமைப்பினருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். #LSPolls #DMKManifesto #DMK #MKStalin
Tags:    

Similar News