செய்திகள்

தமிழக மக்களை பற்றி கவலைப்படாமல் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்- பாலகிருஷ்ணன்

Published On 2019-02-08 09:40 GMT   |   Update On 2019-02-08 09:40 GMT
சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தமிழக மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #Budget2019 #Balakrishnan
திண்டுக்கல்:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தமிழக மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். மக்களை ஏமாற்றுவதற்காக வெத்து வேட்டு அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. கரும்பு, நெல் போன்ற பயிர்களுக்கு ஆதார விலை கிடைக்கவில்லை. இதை பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.



தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதற்கு பட்ஜெட்டில் எந்த முக்கிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.

கஜா புயலுக்காக மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிவாரண நிதியையும் தமிழக அரசால் பெற முடியவில்லை. இது போன்ற நிலையில் பா.ஜ.னதாவுடன் அ.தி.மு.க. எவ்வாறு கூட்டணி வைக்கலாம். இவர்கள் அமைக்கும் கூட்டணி தமிழக மக்களால் நிச்சயம் தோற்கடிக்கப்படும்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் கூட்டணி குறித்து தி.மு.க.வுடன் பேசி வருகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #TNBudget #Budget2019 #Balakrishnan
Tags:    

Similar News