செய்திகள்

திருநாவுக்கரசர், திருமாவளவனுடன் ரஜினி சந்திப்பு- மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார்

Published On 2019-02-06 08:09 GMT   |   Update On 2019-02-06 08:09 GMT
நடிகர் ரஜினிகாந்த் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajini #RajiniMeetsThirunavukkarasar
சென்னை:

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.



அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவில் ரஜினியை திருநாவுக்கரசர் பார்த்ததாக சர்ச்சை வெளியான நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திருநாவுக்கரசர் சமீபத்தில் ரஜினிகாந்தை அமெரிக்காவில் சந்தித்து பேசியதால் கட்சி கோபப்பட்டதாகவும், அதனால்தான் மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ரஜினி தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்பதால், அவரை சந்திக்க நான் அமெரிக்கா வரை செல்ல வேண்டியதில்லை என்று திருநாவுக்கரசர் கூறியது குறிப்பிடத்தக்கது. #Rajini #RajiniMeetsThirunavukkarasar
Tags:    

Similar News