செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Published On 2019-01-31 17:05 GMT   |   Update On 2019-01-31 17:05 GMT
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பாஜக தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். #BJP #TNElectionIncharge
சென்னை:

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்திலும் அ.தி.மு.க., தி.மு.க, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் துறை வாரியாக 28 பேர் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வானதி ஸ்ரீனிவாசன், மோகன் ராஜுலு, நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், கரு.நாகராஜன், கனக சபாபதி, ஜி.கே.நாகராஜ் உள்பட 28 பேரை நியமனம் செய்து உத்தரவிட்டார். #BJP #TNElectionIncharge
Tags:    

Similar News