செய்திகள்

ஆம்பூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்- 14 பேர் படுகாயம்

Published On 2019-01-27 17:21 GMT   |   Update On 2019-01-27 17:21 GMT
ஆம்பூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி 14 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆம்பூர்:

சென்னையில் இருந்து ஓசூருக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் ஆறுமுகம் (வயது 40). பஸ்சை ஓட்டி வந்தார். கண்டக்டர் கோபால் (45). உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் என்ற இடத்தில் பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது மோதியது.

இதில் டிரைவர் ஆறுமுகம், கண்டக்டர் கோபால், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ், போச்சம்பள்ளியை சேர்ந்த விக்ரமன் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு வாணிம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Tags:    

Similar News