'படையப்பா' படத்தை திரையரங்கில் கண்டு ரசித்த சிவகார்த்திகேயன்!
- படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன
- பராசக்தி பொங்கலுக்கு வெளியாக உள்ளது
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு வீடியோ எல்லாம் வெளியிட்டிருந்தார். ரீரிலீஸுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகரும், ரஜினியின் ரசிகருமான சிவகார்த்திகேயனும் படையப்பா படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் இணை தயாரிப்பாளர் கலையரசன் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம், பொங்கலுக்கு வெளியாகி உள்ளது.