சினிமா செய்திகள்

வரலட்சுமி சரத்குமார் இயக்கி, நடிக்கும் 'சரஸ்வதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Published On 2026-02-14 20:30 IST   |   Update On 2026-02-14 20:30:00 IST
  • இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  • இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

இந்நிலையில், 'சரஸ்வதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News